முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2020      ஆன்மிகம்
Image Unavailable

கோவை : இந்தியா மற்றும் லெபனான் நாட்டைச் சேர்ந்த பிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் ஈஷா மகாசிவராத்திரி விழா விடிய விடிய களைகட்ட தயாராக உள்ளது.

கோவை ஈஷா யோகா மையத்தின் 26-வது ஆண்டு மகாசிவராத்திரி விழா வரும் 21-ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு நடக்க உள்ளது. சத்குரு முன்னிலையில் நடக்கும் இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நேரில் பங்கேற்க உள்ளனர்.இவ்விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நாட்டுப் புற இசை கலைஞரும் சூது கவ்வும், ஜிகர்தண்டா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், பேட்ட உள்ளிட்ட படங்களில் பாடல்களை பாடியுள்ள அந்தோணி தாசன், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பாடல்கள் பாடியுள்ள பிரபல பின்னணி பாடகர் கார்த்திக் ஆகியோர் பங்கேற்று தமிழ் பாடல்களை பாட உள்ளனர். மேலும், குஜராத்தைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகர் பார்த்தீவ் கோஹில் மற்றும் ஆதித்யா கத்வியும் தங்கள் இசையால் மக்களை கவர உள்ளனர். இதுதவிர, புகழ்பெற்ற இந்திய கவிஞரான கபீரின் பெயரில் இசை குழுவை உருவாக்கி நாட்டுப்புற பாடல்களை பாடி வரும் ‘கபீர் கஃபே’ குழுவினரும், லெபனானைச் சேர்ந்த டிரம்ஸ் கலைஞர்களும் மக்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்த உள்ளனர்.

தியானலிங்கத்தில் நிகழ்த்தப்படும் பஞ்சபூத ஆராதனாவுடன் தொடங்கும் விழா லிங்க பைரவி தேவியின் மகா யாத்திரை, சக்திவாய்ந்த தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், கண்ணை கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் விடிய விடிய களைகட்ட உள்ளது.

மகாசிவராத்திரி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த 1 லட்சத்து 8 ருத்ராட்ச மணிகள் மற்றும் சர்ப்ப சூத்திரம் பிரசாதமாக வழங்கப்படும். விழாவில் பங்கேற்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு மகா அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.மகாசிவராத்திரி விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் தன்னார்வ தொண்டர்கள் மூலம் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், விழா நாட்களில் கோவையில் இருந்து ஈஷா யோகா மையத்துக்கு சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து