நடிகர் ரஜினியின் மேன் வெஸ் வைல்டு நிகழ்ச்சி டி.வி.யில் விரைவில் வெளியீடு: பியர் கிரில்ஸ் டுவிட்டரில் தகவல்

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2020      உலகம்
rajinikanth 2020 02 19

நடிகர் ரஜினி பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகும் என நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் தெரிவித்துள்ளார்.

அடர்ந்த காட்டில் சென்று சாகசம் செய்யும் பியர் கிரில்ஸ் உடன் பிரதமர் மோடி பயணித்தது போல, நடிகர் ரஜினிகாந்த்தும் காட்டுப் பகுதியில் சாகச பயணம் மேற்கொண்டார். அடர்ந்த காட்டுப் பகுதிகளில் உயிர் வாழ்வது எப்படி, காட்டாறு வெள்ளங்களில் தப்பிப்பது எப்படி என்பது போன்ற சாகசங்களை செய்து, அதை ஒரு தொடராக டி.வி சேனலில் வெளியிட்டு வருபவர் பியர் கிரில்ஸ். அவருக்கு உலகம் முழுவதும் பல கோடி பார்வையாளர்கள் இருக்கின்றனர். கடந்த ஆண்டு பியர் கிரில்ஸ் உடன் இத்தகைய திரில்லான பயணத்தை பிரதமர் மோடி மேற்கொண்டார். தற்போது பியர் கிரில்ஸ் உடன் நடிகர் ரஜினிகாந்த் இத்தகைய காட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதாவது கடந்த மாதம் 27-ம் தேதி, கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில் நடந்த மேன் வெர்சஸ் வைல்ட் படப்பிடிப்பில் நடிகர் ரஜினி பங்கேற்றிருந்தார். இந்தப் படப்பிடிப்பில் நடிகா் ரஜினிகாந்த் நிகழ்ச்சித் தொகுப்பாளா் பியர் கிரில்ஸுடன் இணைந்து பணியாற்றினாா். இந்நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் இந்நிகழ்ச்சி தொடர்பாக பியர் கிரில்ஸ் நேற்று இரண்டு டுவீட்களை வெளியிட்டுள்ளர். நடிகர் ரஜினிகாந்தின் ப்ளாக்பஸ்டர் டி.வி நிகழ்ச்சிக்கு ஆயத்தமாகி வருகிறேன். நான் நிறைய நட்சத்திரங்களுடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். ஆனால் இது எனக்கு சிறப்புமிக்க ஒன்று. இந்தியாவை நேசிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் மற்றொரு டுவீட்டில், ரஜினிகாந்த் எப்போதுமே ஓர் அதிரவைக்கும் நட்சத்திரமாக இருந்துள்ளார். ஆனால் கானகம் வேறு. அவரைப் போன்ற ஒரு பிரபலத்துடன் நேரத்தை செலவழித்தது மகிழ்ச்சி. அவரை முழுவதுமாக வேறொரு பரிமாணத்தில் பார்த்தேன். பியர் கிரில்ஸுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்தை காண ஆவலாக உள்ளேன் எனவும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து