முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் 6 ஆயிரம் கொரோனா வைரஸ் முகமுடிகள் திருட்டு

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

Source: provided

டோக்கியோ : ஜப்பான் செஞ்சிலுவை சங்க ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரம் முகமூடிகள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.   

சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவின் அண்டை நாடான ஜப்பானில் இந்நோய் பரவி வருகிறது. எனவே அங்கு பொதுமக்களும், ஆஸ்பத்திரி ஊழியர்களும் முகமூடிகளை மாட்டிக் கொண்டு அன்றாட பணிகளை கவனித்து வருகின்றனர். 

இந்த நிலையில் துறைமுக நகரமான கோபேயில் உள்ள ஜப்பான் செஞ்சிலுவை சங்க ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரம் முகமூடிகள் திருட்டு போயின. அங்கு டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பயன்படுத்த அட்டைப்பெட்டிகளில் கொரோனா வைரஸ் முகமூடிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. 

அவற்றில் 4 பெட்டிகளில் இருந்த முகமூடிகளை காணவில்லை. அவற்றை திருடர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. 

ஜப்பானில் முகமூடி தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதை பயன்படுத்தி திருடப்பட்ட முகமூடிகளை கூடுதல் விலைக்கு விற்க அவை திருடப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து