முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணி முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகளை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

கீழடியில் கடந்த 2018-ம் ஆண்டு அகழாய்வு பணி நடைபெற்றது. முதல் 3 கட்ட அகழாய்வு பணியினை மத்திய தொல்லியல் துறையினர் நடத்தினர். 4 மற்றும் 5-ம் கட்ட அகழாய்வு பணியினை தமிழக தொல்லியல் துறையினர் நடத்தினர். கடந்த 2015-ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் மற்றும் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டது. மேலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கிடைத்தன. 2018-ம் ஆண்டு நடந்த நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வில், கட்டிட சுவர், உறைகிணறு, அரசு முத்திரை, பானை ஓடுகள், இரும்பு மற்றும் செப்புக்காசுகள், முத்து, பவளம் உள்ளிட்ட பழமையான பொருட்கள் கிடைக்கப்பெற்றன.

இதையடுத்து, கண்டெடுத்த அந்த அகழாய்வு பொருட்களை பெங்களூர் கொண்டு சென்று மத்திய அரசு அங்கு கண்காட்சி அமைத்துள்ளது. தொடர்ந்து மாநில அரசு கண்டெடுத்த  பொருட்களை மதுரையில் உள்ள உலக தமிழ்ச்சங்க கட்டிடத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. நேற்று  6-ம் கட்ட அகழாய்வு பணியினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் பெருமக்கள் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர். 6-ம் கட்ட அகழாய்வு பணிக்காக இடத்தினை ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் சுத்தப்படுத்தப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இரண்டு ஏக்கர் இடத்தில் இந்த அகழாய்வு பணியினை தொடங்கவிருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், தொல்லியல்துறை மற்றும் அகழ்வாராய்ச்சியின் இணை இயக்குனர் சிவானந்தம், அகழாய்வு நல பொறுப்பாளர், தாசில்தார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் முன்னிலையிலேயே இந்த நிகழ்வானது நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து