முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

573 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், பன்னடுக்கு அலுவலக கட்டிடங்கள் மற்றும் அம்மா திருமண மண்டபம் முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் சென்னை, திருவொற்றியூர், நல்ல தண்ணீர் ஓடை குப்பம்  திட்டப் பகுதியில் 58 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 480 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும், சென்னை, கோயம்பேட்டில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் 105 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு அலுவலகக் கட்டிடம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 10 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபம்  மற்றும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் 399 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4,748 அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். 

மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் முக்கியமான ஒன்றாக விளங்கும் உறைவிடத் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், குறிப்பாக, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் நோக்கிலும், தமிழகத்தின் நகர்ப்புற குடிசைப் பகுதிகளில்  அடிப்படை வசதிகள் இன்றி வாழும் நலிவுற்ற ஏழை எளிய மக்களின் வாழ்வாதார நிலையினை மேம்படுத்திடவும், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் பல்வேறு குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்களை அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சென்னை, திருவொற்றியூர், நல்ல தண்ணீர் ஓடை குப்பம்  திட்டப் பகுதியில் 58 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 480 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி  மூலமாக திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் சேலம், கோட்ட கவுண்டம்பட்டி  திட்டப் பகுதியில் 18 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 216 அடுக்குமாடி குடியிருப்புகள்; நாமக்கல் மாவட்டம், ஆலம்பாளையம் - சத்யா நகர்  திட்டப் பகுதியில் 22 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 256 அடுக்குமாடி குடியிருப்புகள், நாமக்கல் மாவட்டம், நாமக்கல் நில வங்கி திட்டம் பகுதி-III திட்டப் பகுதியில் 76 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 960 அடுக்குமாடி குடியிருப்புகள்; கரூர் மாவட்டம், கரூர், சணப்பிரட்டி  திட்டப் பகுதியில் 16 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 192 அடுக்குமாடி குடியிருப்புகள், கோயம்புத்துhர் மாவட்டம், கோயம்புத்தூர், கோவை புதூர்  திட்டப் பகுதியில் 56 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 672 அடுக்குமாடி குடியிருப்புகள், ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் - அளுக்குளி திட்டப் பகுதியில் 24 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 288 அடுக்குமாடி குடியிருப்புகள், திருப்பூர் மாவட்டம், திருப்பூர், பாரதி நகர் திட்டப் பகுதியில் 22 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 288 அடுக்குமாடி குடியிருப்புகள், திருப்பூர், ஜெயா நகர் திட்டப் பகுதியில் 20 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 256 அடுக்குமாடி குடியிருப்புகள், சென்னை, புரசைவாக்கம், கேசவப்பிள்ளை பூங்கா பகுதி-I  திட்டப் பகுதியில் 71 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 864 அடுக்குமாடி குடியிருப்புகள்,  சென்னை, எர்ணாவூர், இந்திரா காந்தி குப்பம்  திட்டப் பகுதியில் 10 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 128 அடுக்குமாடி குடியிருப்புகள், சென்னை, காலடிப்பேட்டை, டோபிகானா பகுதி-I  திட்டப் பகுதியில் 10 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 128 அடுக்குமாடி குடியிருப்புகள், சென்னை, மணலி புதுநகர் பகுதி-I  திட்டப் பகுதியில் 31 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 288 அடுக்குமாடி குடியிருப்புகள்,  தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி  நில வங்கி திட்டம் பகுதி-I  திட்டப் பகுதியில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 92 அடுக்குமாடி குடியிருப்புகள்,  கோவில்பட்டி  நில வங்கி திட்டம் பகுதி-II  திட்டப் பகுதியில் 10 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 120 அடுக்குமாடி குடியிருப்புகள், சென்னை, கோயம்பேட்டில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலப்பரப்பில், 3 அடித்தளங்கள், தூண் தளம் மற்றும் 9 மேல் தளங்களுடன் 1,88,237 சதுர அடி கட்டிட பரப்பளவில், குளிர்சாதன வசதி, தீயணைப்புக் கருவிகள், குடிநீர் சுத்திகரிப்பு வசதி, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், சூரிய மின்சக்தி வசதியுடன் கூடிய மின்விளக்குகள், வாகனங்கள் நிறுத்துமிடம், 1500 கிலோ வாட் திறன்  கொண்ட துணை மின் நிலையம் உள்ளிட்ட வசதிகளுடன், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககம் ஆகிய துறைகளின் பயன்பாட்டிற்காக 105 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு அலுவலகக் கட்டிடம்,  தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், பருத்திப்பட்டு கிராமத்தில் 10 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபம் என மொத்தம் 573 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், பன்னடுக்கு அலுவலகக் கட்டிடம், அம்மா திருமண மண்டபம், ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். 

 

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பி.கே. வைரமுத்து, தலைமைச் செயலாளர் சண்முகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் மற்றும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் (பொறுப்பு) முனைவர் கார்த்திகேயன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் முருகேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து