முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தீவிர பயிற்சி எடுத்து வருகிறேன்:பி.வி.சிந்து

வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

சென்னை: ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டித் தொடருக்கு தீவிரமாகத் தயாராகி வருவதாக பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்தார்.

சென்னை கொளப்பாக்கத்தில் உள்ள ஓமேகா பள்ளியில் பி.வி.சிந்து பேட்மின்டன் அகடமி மற்றும் பேட்மின்டன் விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பி.வி.சிந்து அகடமி மற்றும் விளையாட்டு அரங்கத்துக்கான அடிக்கல் நாட்டினார். மேலும் கட்டுமானப் பணிகளுக்காக 5 லட்ச ரூபாய் நன்கொடையும் அளித்தார்.

முன்னதாக பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து நிருபர்களிடம் கூறியதாவது:- ஒலிம்பிக் போட்டிக்காகத் தீவிரமாக தயாராகி வருகிறேன். குறிப்பாக தற்காப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறேன். சிறிய தவறுகளால் ஏற்படும் பாதிப்புகளை கவனத்தில் கொண்டு பயிற்சி பெறுகிறேன். அதற்கு உடல்திறன் மேம்படுத்துவதுடன், மனதை ஒருமுகப்படுத்தவும் முக்கியத்துவம் அளித்து வருகிறேன். கடந்த 9 மாதங்களாக தியானப் பயிற்சி மேற்கொள்கிறேன். அது மனதை ஒருமுகப்படுத்தி உணர்ச்சி வசப்படாமல் தவறுகளை குறைக்க உதவி வருகிறது.வெல்ல முடியாத வீராங்கனைகள் என்று யாரும் கிடையாது. யாரும் யாரையும் வெல்ல முடியும். அப்படி நீங்கள் குறிப்பிடும் வீராங்கனைகள் உலக சாம்பியன் பட்டம் வென்றதில்லை. அதனால் மீண்டும் சொல்கிறேன். வெல்ல முடியாதவர் என்று யாருமில்லை. வெற்றி, தோல்விகள் வாழ்க்கையின் ஒரு பகுதி தான். ஆனால் ஆடும்போது அனுபவித்து, முழுமனதுடன் விளையாட வேண்டும். என்ன தவறு செய்கிறோம் என்பதில் தெளிவு வேண்டும். அதனை சரி செய்து கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வென்றாக வேண்டும் என்ற அழுத்தம் மட்டுமின்றி, மக்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. ரசிகர்கள் காட்டும் அன்பும் , ஆதரவையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஒவ்வொரு நாளும் இரண்டரை முதல் 3 மணி நேரம் தனிப்பட்ட பயிற்சியாளரின் கண்காணிப்பில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதற்காக விரைவில் இந்தோனேசியாவை சேர்ந்தவர் எனது பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளார். இவ்வாறு பி.வி.சிந்து கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து