முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசி.க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 122 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றம்

வெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

வெலிங்டன் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி டாப் ஆர்டர் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் உள்ள பாசின் ரிசர்வ் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங்கை துவக்கியது. 

இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் களம் இறங்கினர். இந்திய அணி துவக்கம் முதலே தடுமாற்றத்தை சந்தித்தது. பிரித்வி ஷா 16 ரன்களில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய புஜாரா 11 ரன்களில் பெவிலியன் திரும்பினார். நட்சத்திர வீரரும் இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலி 2 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். இந்திய அணி உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் சேர்த்திருந்தது. துவக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 29 ரன்களிலும், ரகானே 2 ரன்களிலும் களத்தில் இருந்தனர். அதன்பின்னர் தொடர்ந்து ஆடிய அகர்வால், 34 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ரகானே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விக்கெட்டை காப்பாற்ற போராடினார். மறுமுனையில் விகாரி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரகானேவுடன், ரிஷப் பன்ட் இணைந்தார். தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே 38 ரன்களுடனும், ரிஷப் பன்ட் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அப்போது, மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. போட்டி தொடங்கும்போதே மழை தூறல் விழுந்தது. ஆடுகளம் மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது. தேநீர் இடைவேளையின்போது மீண்டும் மழை பெய்ததால் போட்டியை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே நேற்று நடைபெற்ற முதல்நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இன்று 2 - ம் நாள் ஆட்டம் நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து