முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் டிரம்புடனான விருந்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடிக்கு ஜனாதிபதி அழைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2020      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் அமெரிக்க அதிபர் டிரம்புடனான விருந்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி கடந்த ஆண்டு அமெரிக்கா சென்ற போது, அந்நாட்டு அதிபர் டிரம்பை இந்தியா வருமாறு அழைத்துள்ளார். அதனையேற்று, அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மணைவி மெலானியா டிரம்ப் ஆகிய இருவரும் இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக இன்று 24-ம் தேதி இந்தியா வரவுள்ளனர். அவர்களது பயணத்தில் முக்கியமாக குஜராத் மாநிலம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்க அதிபர் வருகையையொட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகர் அலங்கரிக்கபட்டுள்ளது. அவரை வரவேற்கும் பொருட்டு கெம்ச்சோ டிரம்ப் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. அதில், ஏராளமானோர் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டிரம்புடன் விருந்தில் கலந்து கொள்ளுமாறு தமிழக முதல்வர்.  எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை 25-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விருந்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நாளை 25-ம் தேதி நடைபெறும் இந்த விருந்தில் பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அல்லது நாளை 25-ம் தேதி டெல்லி புறப்பட்டு செல்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விருந்தின் போது அமெரிக்க அதிபர் டிரம்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விருந்தில் கலந்து கொள்ளும் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் டிரம்பை சந்திக்க மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து