டெல்லி கலவரத்தால் ஏற்பட்ட உயிர் பலி - ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை

வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2020      உலகம்
UN General Secretary 2020 02 27

நியூயார்க் : டெல்லி வன்முறை காரணமாக ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜரிக் கூறியபோது, டெல்லியிலிருந்து வரும் உயிரிழப்பு செய்திகள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கு வருத்தத்தை அளித்துள்ளது. இதுபோன்ற வன்முறைகள் தவிர்க்கப்பட வேண்டியவை என்று தெரிவித்துள்ளார்.டெல்லியில் குடியுரிமை சட்டத்தின் (சி.ஏ.ஏ.) ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மோதல் நடைபெற்று வருகிறது.

இதில், டெல்லி வடகிழக்குப் பகுதியில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 3 நாட்களாகக் கலவரம் நடந்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். 100 - க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சட்டம் - ஒழுங்கு நிர்வாகத்தில் டெல்லி போலீஸார், மத்திய ஆயுதப்படை போலீஸார் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து