முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி சிறப்பு காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நியமனம்

வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2020      இந்தியா
Image Unavailable

டெல்லி காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவாவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் வன்முறை பரவிய நிலையில் அமுல்யா பட்நாயக்கிற்கு பதில் எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 1-ம் தேதி டெல்லி காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவா பொறுப்பேற்க உள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் வடகிழக்கு டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது நிகழ்த்தப்பட்ட வன்முறையில் இதுவரை 38 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, அசம்பாவிதம் மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்காக கலவரப்பகுதிகளில் மட்டுமின்றி பிற இடங்களிலும் டிரோன்கள் மூலம் போலீசார் நிலைமையை கண்காணித்து வருகின்றனர். நகரில் குவிக்கப்பட்டுள்ள  போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கலவரம் குறித்து விசாரிக்க இரண்டு சிறப்பு விசாரணை குழுக்களை டெல்லி போலீசார் தரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. கலவரம் தொடர்பாக இதுவரை 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 130 பேர் கைது  செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த சிறப்பு காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 1-ம் தேதி டெல்லி காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவா பொறுப்பேற்க உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து