முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஆய்வு கூட்டம்:அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது:

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2020      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்த்துறை ஆய்வு கூட்டத்தில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வருவாய்த்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
திருமங்கலம் வருவாய் கோட்டம் மற்றும் வருவாய் வட்டத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கென மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் பணிகள் குறித்த வருவாய்த்துறை ஆய்வுக்கூட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன்,திருமங்கலம் வட்டாட்சியர் தனலட்சுமி ஆகியோர் வரவேற்றனர்.மண்டல துணை தாசில்தார்கள்,வருவாய் ஆய்வாளர்கள்,கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆய்வு கூட்டத்திற்கு தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.
இந்த ஆய்வின் போது திருமங்கலம் வருவாய் வட்டத்தில் வசித்திடும் பொதுமக்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை,இலவச வீட்டு மனைப்பட்டா,பட்டா மாறுதல்,உட்பிரிவுசெய்தல் மற்றும் பல்வேறு சான்றிதழ்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.அப்போது திருமங்கலம் வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்மாதிரியான மக்கள் நலத்திட்ட பணிகளுக்கு தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில்: திருமங்கலம் வட்டத்தில் மனுக்களே நிலுவையில் இல்லாத நிலையை அதிகாரிகள் உருவாக்கி தமிழகத்திற்கு முன்னோடியாக திருமங்கலம் வட்டம் திகழ்ந்திட வேண்டும்.இந்தியாவிலே அதிகளவாக 11 மருத்துவக்கல்லூரி அமைத்திட அனுமதி பெற்று தமிழக முதல்வர் சாதனை படைத்துள்ளார்.இந்த மருத்துவக் கல்லூரிகளுக்கு தேவையான இடங்களை வருவாய்த்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.எனவே அதிகாரிகள் அனைவரும் சிறப்புடன் செயல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தை மக்கள் நேசித்திடும் அலுவலகமாக உருவாக்கி பெருமை சேர்த்திட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆய்வின்போது தமிழக பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குநர் ஜெகன்னாதன்,பயிற்சி கூடுதல்,துணை கலெக்டர்கள்,மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம், திருமங்கலம் ஒன்றிய கழக செயலாளர் வக்கீல்.அன்பழகன், திருமங்கலம் முன்னாள் யூனியன் சேர்மன் தமிழழகன்,திருமங்கலம் யூனியன் சேர்மன் லதாஜெகன், டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,டி.கல்லுப்பட்டி முன்னாள் யூனியன் துணை சேர்மன் டாக்டர்.பாவடியான், பேருர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன் கட்சி வழக்கறிஞர்கள் வெங்கடேஸ்வரன்,பாஸ்கரன்,முத்துராஜா கட்சி நிர்வாகிகள் சுகுமார்,சாமிநாதன்,கண்ணன்,ராமகிருஷ்ணன்,குருகுல மாணவன் அழகர்சாமி,கரிகாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து