திருப்பதி கோவிலில் பிப்ரவரி மாத உண்டியல் வருமானம் ரூ. 89 கோடி

சனிக்கிழமை, 7 மார்ச் 2020      ஆன்மிகம்
tirupathi 2020 03 07

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த பிப்ரவரி மாதத்தில் உண்டியல் மூலம் ரூ. 89.07 கோடிவருவாய் வந்ததாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலின் உண்டியல் வருமானம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது உண்டியல் மூலம் கிடைக்கும் ஆண்டு வருவாய் சுமார் ரூ. 1300 கோடியாக உள்ளது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் கோயிலின் உண்டியல் வருமானம் ரூ. 89.07கோடி என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.கடந்த பிப்ரவரி மாதத்தில் 21.68 லட்சம் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். 83.91 லட்சம் லட்டு பிரசாதங்கள் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 7.77 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை செய்துள்ளனர். திருமலையில் 5 நாள் தெப் போற்சவம் கடந்த வியாழன்று தொடங்கியது. இதில் இரண்டாம் நாளான வெள்ளிக் கிழமை இரவு 7 மணி முதல் 8 மணி வரை பாமா, ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணர் தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் இதில் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து