முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 984 குறைந்து ரூ. 30,560-க்கு விற்பனை

செவ்வாய்க்கிழமை, 17 மார்ச் 2020      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 984 குறைந்து ஒரு சவரன் ரூ.30, 560-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.123 குறைந்து ரூ. 3820-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலால் தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்தது. இந்த நிலையில், கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பொருளாதாரத்தை மீட்கும் வகையில் அமெரிக்க மத்திய வங்கி  வட்டி விகிதத்தை பூஜ்ஜியம் முதல் கால் சதவீதம் 0 - 0.25 என்ற வரம்புக்குள் இருக்குமாறு நேற்று முன்தினம் குறைத்தது. இதன் காரணமாக நேற்று தங்கத்தின் விலை குறைவை கண்டுள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 984 குறைந்து ஒரு சவரன் ரூ.30,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 123 குறைந்து ரூ. 3820-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்திய பங்குச் சந்தைகளில் சிறிய ஏற்றம் காணப்பட்ட நிலையில், தங்கம் விலை சரிவை கண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து