பிரபல நடிகர் விசு சென்னையில் காலமானார்

ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2020      சினிமா
actor Visu 2020 03 22

Source: provided

சென்னை : பிரபல நடிகரும், திரைப்பட இயக்குனருமான விசு நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 74. 

சம்சாரம் அது மின்சாரம், திருமதி ஒரு வெகுமதி, மணல்கயிறு போன்ற பலவெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் விசு. குறிப்பாக சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் இன்றளவும் மக்களால் விரும்பி பார்க்கப்படும் ஒரு அற்புதமான திரைப்படமாகும். நடிகர் விசு நடிகராகமட்டுமின்றி இயக்குனர், கதாசிரியர், வசனகர்த்தா, எழுத்தாளர் என பல திறமைகளை தன்னிடத்தில் கொண்டிருந்தார். இவர் தொலைக்காட்சியில் நடத்திய அரட்டை அரங்கம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் விசு சிறுநீரக கோளாறு காரணமாக சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் அவர் காலமானார். அவரது மறைவிற்கு திரைஉலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். துரைப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து