கொரோனா தடுப்பு நடவடிக்கை: கேரள ஐகோர்ட்டு ஏப்ரல் 8 - ந் தேதி வரை மூடல்

திங்கட்கிழமை, 23 மார்ச் 2020      இந்தியா
Kerala-HC 2020 03 23

திருவனந்தபுரம் : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கேரள ஐகோர்ட்டு நேற்று முதல் வருகிற ஏப்ரல் 8-ந்தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கேரளாவில் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடும் மால்கள், தியேட்டர்கள், மார்க்கெட்டுக்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. அரசு அலுவலகங்களும் குறைந்த பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கேரள ஐகோர்ட்டும் நேற்று முதல் வருகிற ஏப்ரல் 8 - ந் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பை நேற்று காலை கேரள அட்வகேட் ஜெனரலும், வக்கீல் சங்க பிரதிநிதிகளும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட பின்பு, ஐகோர்ட்டு வருகிற ஏப்ரல் 8 - ந்தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இக்காலகட்டத்தில் அவசர வழக்குகள் மற்றும் ஆட்கொணர்வு தொடர்பான வழக்குகள் மட்டும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் என்று கூறப்பட்டு உள்ளது. ஐகோர்ட்டில் பணியாளர்கள் மற்றும் வக்கீல்களை தவிர வேறு யாரும் வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து