முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று முதல் 144 தடை உத்தரவு - தமிழக அரசு விளக்க அறிக்கை

திங்கட்கிழமை, 23 மார்ச் 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு குறித்து தமிழக அரசு நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கான கட்டுப்பாடுகள் அதில் கூறப்பட்டுள்ளது.
1. ஏப்ரல் 1 - ம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும்.
2. 5 நபருக்கு மேற்பட்டோர் பொது இடங்களில் கூட தடைவிதிக்கப்படுகிறது.
3. அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும்    மூடப்படும்.
4. டாஸ்மாக் கடைகள் உட்பட வணிக நிறுவனங்களும் மூடப்படும்.
5. அவசியம் இல்லாமல் வீடுகளை விட்டு வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே வரவேண்டும். அவ்வாறு வாங்கும் போது 1 மீட்டர் இடைவெளி விட்டு வாங்க வேண்டும்.
6. 26 - ம் தேதி நடக்கவிருந்த 11 - ம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. ஆனால் 12 - ம் வகுப்பு தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும்.
7. அனைத்து பள்ளி, கல்லூரி தேர்வுகளும், அரசு பணிக்கான தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன.
8. அத்தியாவசிய அலுவல் பணிகள் தவிர அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்படும்.
9. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் டாக்சி, ஆட்டோ, மெட்ரோ ரயில், ஏ.சி.பேருந்துகளை இயக்க அனுமதி இல்லை.
10.மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து ரத்து செய்யப்படும்.
11. அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள் தொடர்ந்து இயங்கும்.
12. அனைத்து கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், மற்றும் பணியாளர்கள் மார்ச் 31 - ம் தேதி வரை வீட்டில் இருந்தே பணியாற்றவேண்டும்.
13. மார்ச் 1 ம் தேதிக்கு பிறகு வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திகொள்ள வேண்டும். அவர்களை மாவட்ட அதிகாரிகள் கண்காணிப்பார்கள். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மருத்துவ பரிசோதனையை தவறாமல் செய்து கொள்ள வேண்டும்.
14. ஐ.டி.உள்ளிட்ட தொழில்நிறுவன ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.
15.மார்ச் 16 - க்கு முன்பே திட்டமிட்ட திருமணங்கள் மட்டும் நடத்த வேண்டும். அந்த திருமணத்திலும் உறவினர்கள் உட்பட 30 பேர் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும்.
16. மகளிர் விடுதி, ஆதரவு இல்லங்கள் தொடர்ந்து செயல்படும். பணியில் உள்ள மகளிர்களுக்கான விடுதி, வயோதிகர்களுக்கான விடுதி, ஆதரவு இல்லங்கள் உள்ளிட்டவை செயல்படலாம்.
17. ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற உணவு வழங்கும் நிறுவனங்களின் சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
18. ஆன்லைன் நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள் செயல்பட தடைஇல்லை.
19. வங்கிகள், ஏ.டி.எம்.கள் செயல்பட தடைஇல்லை.
20. பால், பால்பொருட்கள், உரங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தடை இல்லை.
21. தொழிற்சாலைகள், தண்ணீர் கேன் டெலிவரிகளுக்கு தடை இல்லை. கிடங்குகள், குடோன்கள் செயல்படலாம்.
22. உணவகங்கள், ஓட்டல்களில் பார்சல் மட்டும் வாங்கலாம்.
23 .டீக்கடைகளில் கூட்டம் கூட கூடாது.
24. பெட்ரோல் நிலையங்கள், கேஸ் நிரப்பும் நிலையங்கள் உள்ளிடவைகளுக்கு தடை இல்லை.
25. ஏற்றுமதி சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனங்கள் சுழற்சி முறையில் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.
26. அத்தியாவசிய, அவசர பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து இயங்காது.
27. பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன்கடைகள் போன்றவை திறந்திருக்கும். இவ்வாறு தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து