விராட் கோலி கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரர் சந்தர்பால்

திங்கட்கிழமை, 23 மார்ச் 2020      விளையாட்டு
Virat Kohli - Chanderpaul 2020 03 23

வெஸ்ட் இண்டீஸ் : வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்த சந்தர்பால், விராட் கோலி தான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்தின் ஜோ ரூட், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆகியோர் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக கருதப்படுகிறார்கள். இதில் விராட் கோலி மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் மூன்றிலும் 50 - க்கு மேல் சராசரி வைத்துள்ளார்.

இந்நிலையில் விராட் கோலிதான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சந்தர்பால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சந்தர்பால் கூறுகையில், விராட் கோலிதான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவருடைய ஆட்டத்தின் எல்லா அம்சங்களிலும் கடினமாக பயிற்சி மேற்கொண்டிக்கிறார். அதன் முடிவை அவரது ஆட்டம் வெளிப்படுத்துகிறது.

அவர் உடற்தகுதியில் அதிக கவனம் செலுத்துகிறார். அதுபோல் கிரிக்கெட் திறனை வளர்க்கும் வகையில் அதிக பயிற்சி மேற்கொள்கிறார். கடின உழைப்பின் மீது அவர் கவனம் செலுத்தி, எப்போதுமே சிறப்பாக விளையாட வேண்டும் என விரும்பும் வீரர்களில் அவர் ஒருவர் என்பதை நம்மால் பார்க்க முடியும்.

நீண்ட காலத்திற்கு சிறந்த ஆட்டத்தை தொடர்வது எளிதான காரியம் அல்ல. அதற்காக அவரை நாம் பாராட்டியே ஆக வேண்டும். உங்களுடைய பயிற்சியின் மீது நீங்கள் கவனம் செலுத்தினால், அதன் ரிசல்ட் கண்டிப்பாக வெளிப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து