கொரோனா பரவல்: அடுத்த 2 வாரங்கள் மிகவும் கடினமாக இருக்கப் போகிறது - கிரிக்கெட் வீரர் அஸ்வின் சொல்கிறார்

செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2020      விளையாட்டு
ashwin 2020 03 24

மும்பை : கொரோனா வைரஸ் தொடர்பாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது டுவிட்டர் பதிவில், அடுத்த 2 வாரங்கள் மிகவும் கடினமாக இருக்கப் போகிறது எனத் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் அனைத்துமே கொரோனா வைரஸ் தொற்றால் அதிக அச்சத்தில் உள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்குகிறது. இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க, மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மத்திய, மாநில அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன. ஆனால் அதையும் மீறி பொதுமக்கள் நடமாட்டம் இருக்கிறது. இதனால், பல்வேறு பிரபலங்களும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

அனைத்து விதமான தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன (நம்பகமான மற்றும் பயத்தின் காரணமாக வரும் தகவல்கள்). ஒரு விஷயம் உறுதியாகத் தெரிகிறது. அடுத்த 2 வாரங்கள் மிகவும் கடினமாக இருக்கப் போகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரமும் அடுத்த 2 வாரங்களுக்குத் தனிமையை உணர வேண்டும். ஏனென்றால் இது பரவினால் மிகப்பெரிய அழிவாக இருக்கும். நாம் அதிக மக்கள்தொகையைக் கொண்ட ஒரு நாடு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்களில் பெரும்பாலானோருக்குத் தகவல் போய்ச் சேரவில்லை.இவ்வாறு அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து