கொரோனா அச்சுறுத்தல்: தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 34,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை

புதன்கிழமை, 25 மார்ச் 2020      தமிழகம்
Plus-2-exam 2020 03 25

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 34,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.

கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மதுரையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. எனினும் தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெற்றுள்ளது. 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த 2-ம் தேதி தொடங்கிய நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது.

நேற்று முன்தினம் வேதியியல், கணக்கு பதிவியியல் தேர்வுகள் நடைபெற்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வில் நேற்று 34,000 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் மாலை முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. எனினும், பல்வேறு பகுதியில் போக்குவரத்து முடங்கியதால் மாணவர்கள் வரவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நீண்ட தொலைவுகளிலிருந்து வந்து தேர்வெழுதும் மாணவர்கள் பலர் தேர்வுகளுக்கு வரவில்லை என தெரிகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1500 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் நேற்று முன்தினம் நடந்த 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,616 பேர் பங்கேற்கவில்லை என்றும் மார்ச் 2-ம் தேதி நடந்த தமிழ் தேர்விலும் 1,704 பேர் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடைசி தேர்வில் மாணவர்கள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து