முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 506 விமானங்கள் முற்றிலும் நிறுத்தம்

புதன்கிழமை, 25 மார்ச் 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை விமான நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு இயக்கப்பட்ட 506 பயணிகள் விமானசேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் விமான சேவைகளுக்கு கடந்த 22-ம் தேதியிலிருந்து தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதை போல் உள்நாட்டு விமானசேவைகளுக்கு நேற்று அதிகாலையிலிருந்து தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் சர்வதேச விமான சேவை முற்றிலுமாக முடங்கியது. (வருகை 57, புறப்பாடு 57 என மொத்தம் 114 விமானசேவைகள் ரத்து). கடந்த 22-ம் தேதியிலிருந்து ரத்தானது. நேற்று முதல் சென்னையில் இருந்து புறப்படும் 196 விமானங்கள் வருகை தரும் 196 விமானங்கள் என மொத்தம் 392 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னை விமான நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு இயக்கப்பட்ட 506 பயணிகள் விமானசேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.அதே நேரத்தில் சென்னை பழைய விமான நிலையத்தில் சரக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. நள்ளிரவு 12.30 மணிக்கு ஹாங்காங்கிலிருந்து கேத்தேபசிபிக் ஏர்லைனஸ் சரக்கு விமானம் சென்னை வந்து விட்டு, மீண்டும் அதிகாலை 3 மணிக்கு பெங்களூர் புறப்பட்டு சென்றது. அதைப்போல் சிங்கப்பூரிலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சரக்கு விமானம் அதிகாலை 5 மணிக்கும், மஸ்கட்டிலிருந்து ஓமன் ஏர்லைன்ஸ் சரக்கு விமானம் காலை 6.30 மணிக்கும் சென்னை பழைய விமான நிலையம் வந்தன. நேற்று பகலில் மேலும் சில சரக்கு விமானங்கள் வரவிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஊரடங்கு அமலில் இருந்தாலும், விமான நிலைய சரக்கு கையாளும் பகுதியில், பணியாற்றும் லோடார்கள் அத்தியாவசியப் பணி என்ற அடிப்படையில் வேலைக்கு வந்துள்ளதால், சரக்கு விமானங்களில் சரக்குகளை ஏற்றி இறக்கும் பணி தடையின்றி நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து