தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு உதவ ரூ.3 கோடி நிதி: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

புதன்கிழமை, 25 மார்ச் 2020      தமிழகம்
anbumani ramadoss 2020 03 25

தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் மருத்துவக் கருவிகள் வாங்க 3 கோடி ரூபாய் வழங்குவதாக, எம்.பி.யும் பா.ம.க. இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். 

பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை அமல்படுத்தியது. இதனிடையே நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் மருத்துவக் கருவிகள் வாங்க 3 கோடி ரூபாய் வழங்குவதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில் அவர் கூறியதாவது;

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கான கருவிகள், நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், கொரோனா நோயை கட்டுப்படுத்தத் தேவைப்படும் பிற கருவிகளை வாங்க தமிழ்நாடு அரசுக்கு பெருந்தொகை தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதன் பொருட்டு தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து முதல்கட்டமாக 3 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் தேவையை பொறுத்து அடுத்தத்தடுத்த கட்டங்களில் கூடுதல் நிதி ஒதுக்க தயாராக உள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து