இந்தியாவை காப்பாற்ற வீட்டிக்குள்ளேயே இருங்கள் : மக்களுக்கு விராட் கோலி வேண்டுகோள்

புதன்கிழமை, 25 மார்ச் 2020      விளையாட்டு
SPORTS-2 2020 03 25

Source: provided

மும்பை : அரசு அறிவித்துள்ள ஊடரங்கு உத்தரவை கடைபிடித்து இந்தியாவை காப்பாற்ற வீட்டுக்குள்ளேயே இருங்கள் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனாவின் தாக்கத்தை ஒடுக்க  பிரதமர் மோடி, 21 நாட்களுக்கு ஊடரங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் என்று நாட்டு மக்களுக்கான அவரது 2-வது உரையில் தெரிவித்தார். இந்நிலையில் இந்தியாவை காப்பாற்ற வீட்டுக்குள்ளேயே இருங்கள் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மா உடன் இணைந்து மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில், 

தற்போது நம்மை பரிசோதிப்பதற்கான நேரம் இது. இந்த சூழ்நிலையில் அபாயகரத்தை புரிந்து கொண்டு விழித்திட வேண்டியது நமக்கு அவசியமானது. அரசு என்ன சொன்னதோ அதை அப்படியே பின்பற்றுங்கள். ஒன்றாக இணைந்திருப்போம். இது ஒவ்வொருவருக்குமான வேண்டுகோள். வீட்டிற்குள்ளே இருங்கள். கொரோனா வைரசில் இருந்து உங்களுடைய குடும்பத்தை காப்பாற்றுங்கள். ஊரடங்கு உத்தரவை நீங்கள் உதாசீனம் படுத்தினால் ஒட்டுமொத்த நாடும் மிகப்பெரிய அளவில் விலைகொடுக்க வேண்டியது நிலை ஏற்படும். உங்கள் ஒற்றுமையை காட்டுங்கள். உயிரையும் நாட்டையும் காப்பாற்றுங்கள் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து