கொரோனா நிவாரண நிதிக்கு 6 மாத சம்பளத்தை நன்கொடையாக அளித்த புனியா

புதன்கிழமை, 25 மார்ச் 2020      விளையாட்டு
SPORTS-4 2020 03 25

Source: provided

சண்டிகர் : மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது ஆறு மாதம் சம்பளத்தை அரியானா மாநில கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதற்கிடையே விளையாட்டு வீரர்கள் தங்களால் இயன்ற பண உதவிகளை கொரோனா வைரஸ் நிவாரணத்திற்கு நிதியாக வழங்கலாம் என்று மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜு தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில் அரியானாவைச் சேர்ந்த இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது ஆறுமாத சம்பளத்தை அம்மாநில முதல்வர் எம்.எல். கட்டார் தொடங்கியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதல் நிவாரணத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். பஜ்ரங் புனியா ரெயில்வேயில் சிறப்பு அதிகாரியாக பணிபுரிகிறார். இதில் கிடைக்கும் ஆறுமாத சம்பளத்தைதான் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து