அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது: கெஜ்ரிவால்

வியாழக்கிழமை, 26 மார்ச் 2020      இந்தியா
Kejriwal 2020 03 26

டெல்லியில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில், டெல்லியில் பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார். காய்கறி கடைகளுக்கும், மளிகை கடைகளுக்கும் டெல்லி அரசு இணையம் வழியாக வழங்கும் அடையாள அட்டைகள் மூலம் வியாபாரிகள் தங்கள் கடைகளை திறக்கலாம் என்றும் அவர் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து