பிரேசிலைச் சேர்ந்த 20 வயது இளம் டென்னிஸ் வீரருக்கு கொரோனா

வியாழக்கிழமை, 26 மார்ச் 2020      விளையாட்டு
SPORTS-3 2020 03 26

Source: provided

பிரேசில்லா : பிரேசில் நாட்டைச் சேர்ந்த 20 வயது இளம் டென்னிஸ் வீரரான தியாகோ செபோத் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நாட்டை ஆளும் பிரதமர் குடும்பம், பிரபலங்கள், வீரர்கள், மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என யாரையும் விட்டு வைக்கவில்லை. இத்தாலியின் ‘செரி ஏ’ கால்பந்து லீக்கில் விளையாடிய பல வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.பிரேசில் நாட்டைச் சேர்ந்த இளம் டென்னிஸ் வீரர் தியாகோ செபோத். மார்ச் 1-ம் தேதி நடைபெற்ற சிலி ஓபனில் நார்வே வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் மிக இளம் வயதில் ஏ.டி.பி. சாம்பியன் பட்டத்தை வென்ற பிரேசில் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் கொரோனா அறிகுறியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பரிசோதனை மேற்கொண்டார். அதில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் தற்போது வைரஸ் தொற்றால் பாதித்துள்ளேன். இது மாதிரி பரிசோதனையில் தெரிய வந்தது.

10 நாட்களுக்கு முன் காய்ச்சல் இருந்தது, அத்துடன் அறிகுறி தென்பட்டது. ஆனால் இன்னும் சில நாட்களில் வைரஸ் தாக்கும் குறைந்து குணமடைந்து விடுவேன். கடந்த நில நாட்களாக நன்றாக இருப்பதாக உணர்கிறேன். ஆனால், ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதால் நான் வீட்டிக்குள்ளேயே இருந்து வருகிறேன். இது மிகவும் கொடிய நோய். என்றாலும் ஒவ்வொருவருடைய வலிமையாலும் இதை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து