மேலும் ஒருவருக்கு கொரோனா: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

வியாழக்கிழமை, 26 மார்ச் 2020      தமிழகம்
vijayabaskar 2020 03 24

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

துபாயில் இருந்து திருச்சி வந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது என தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். 

சீனாவின் வூகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரசால் தமிழகத்தில் 2 பேர் பலியான நிலையில், 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை வரை 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இந்த 26 பேரில் ஏற்கனவே ஒருவர் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவரும் இறந்ததாக  தகவல்கள் வெளியாயின.  அந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனால் அவர் கொரோனாவால் தான் உயிரிழந்தார் என இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் தான் திருச்சி அரசு மருத்துவமனையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் துபாயில் இருந்து திருச்சிக்கு திரும்பிய நபர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து