முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோழி, முட்டை, இறைச்சி உண்பதால் கொரோனா பரவாது: தமிழக அரசு மீண்டும் விளக்கம்

புதன்கிழமை, 1 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

கோழி, முட்டை மற்றும் இறைச்சி உண்பதல் கொரோனா வைரஸ் பரவாது என தமிழக அரசு மீண்டும் விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பாக பீதியை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பல்வேறு போலியான செய்திகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக கோழி, முட்டை மற்றும் இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவும் என தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் தகவல்கள் பகிரப்படுகிறது. ஆனால் அசைவ உணவுகள் சாப்பிடுவதால் கொரோனா பரவாது என தமிழக அரசு விளக்கம் அளித்தது. அதன் பிறகும் கொரோனா தொடர்பான போலி செய்திகள் தொடர்ந்து உலா வருகின்றன. இதனால் இறைச்சி விரும்பிகள் அச்சமடைந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்க தமிழக அரசு மீண்டும் விளக்கம் அளித்துள்ளது. கோழி, முட்டை மற்றும் இறைச்சி உண்பதால் கொரோனா பரவாது என அரசு கூறி உள்ளது. கோழி, முட்டை, குறித்து சமூக ஊடகங்கள் மூலம் மக்களிடம் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இதுபோன்ற வதந்திகளால் கோழி வளர்ப்பு தொழில் நலிவடைந்து பொருளாதார இழப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. தவறாக வழிநடத்தும் வதந்திகள் மூலம் நமது புரத தேவையில் இழப்பு ஏற்படுகிறது. எனவே, தயக்கமில்லாமல் அனைவரும் கோழி, முட்டை மற்றும் இறைச்சியை உட்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து