முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லீக்குகள் முடிவு பெறாவிடில் இழப்பை சந்திக்க நேரிடும் : ஐரோப்பிய கால்பந்து சங்க கூட்டமைப்பு எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 3 ஏப்ரல் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பெல்ஜியம் : கொரோனா வைரஸ் தொற்றால் தள்ளி வைக்கப்பட்டுள்ள கால்பந்து லீக்குகள் முடிவு பெறாவிடில் இழப்பை சந்திக்க நேரிடும் என ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. 

ஐரோப்பியாவில் உள்ள 29 நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்பந்து கிளப் அணிகள் உள்ளன. இவைகள் ஐரோப்பியன் கிளப் அசோசியேசன் மற்றும் ஐரோப்பியன் லீக்குகள் அமைப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது.  29 நாடுகளிலும் உள்ள கிளப்புகள் தரம் பிரித்து லீக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் அணிகள் ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக்கில் விளையாட தகுதி பெறும். தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து லீக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் ஐரோப்பிய நாடுகள் அதிக அளவில் இருக்கிறது. இதனால் நிறுத்தப்பட்ட போட்டிகள் எப்போது தொடங்கும் எனத் தெரியவில்லை.

இதனால் பெல்ஜியம் லீக் போட்டியின் அமைப்பாளர்கள் இத்துடன் தங்களுடைய லீக்கை முடித்துக் கொண்டு புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ள அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மற்ற லீக்குகளின் அமைப்புகளும் இதே முடிவை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக போட்டிகள் அனைத்தும் முடிந்த பிறகு புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்து அணிகள் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான அட்டவணை தயாரிக்கப்படும். ஒருவேளை பாதிலேயே லீக்குகளை முடித்துக் கொண்டால் முன்னணி அணிகள் சாம்பியன்ஸ் லீக்கை தவற விட வேண்டிய நிலை ஏற்படும் என ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து