முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆனது

சனிக்கிழமை, 4 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

விழுப்புரத்தில் நேற்று கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்ததை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி மாநாட்டில் இருந்து விழுப்புரம் திரும்பிய 9 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.இவர்களில் 53 வயது மதிக்கத்தக்க ஒருவர் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். அவர் விழுப்புரம் வண்டிமேடு சிங்காரதோப்பு பகுதியை சேர்ந்தவர். வ.பகண்டை கூட்டு ரோடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து