முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சா எண்ணெய் மீது கணிசமான இறக்குமதிக்கு வரி விதிப்பு: டிரம்ப்

செவ்வாய்க்கிழமை, 7 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது கணிசமாக வரிவிதிப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருளுக்கான தேவை குறைந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் தேவையை காட்டிலும், தயாரிப்பு மற்றும் தேக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் இதனை சரி செய்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. 

இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலையில் இதே நிலை நீடித்தால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது கணிசமாக வரிவிதிப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது இதுகுறித்து அவர் கூறியதாவது:- 

கச்சா எண்ணெய் விலை இப்படியே இருந்தால் கணிசமான வரிவிதிப்பை அமல்படுத்துவேன். ஏனென்றால் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் நாங்கள் சுதந்திரமாக உள்ளோம். எங்களிடம் எங்கள் சொந்த எண்ணெய் இருக்கிறது. நான் வரிவிதிப்பை அமல்படுத்துவதன் மூலம் வெளிநாட்டு எண்ணெயை நாங்கள் விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்த முடியும். அமெரிக்க எரிசக்தி துறையை பாதுகாப்பதற்கு இந்த வரிவிதிப்பு நடவடிக்கை அத்தியாவசியமாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து