முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹைட்ராக்சிகுளோரோகுயின் விவகாரம்: இந்தியாவுக்கு அதிபர் டிரம்ப் பாராட்டு

புதன்கிழமை, 8 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

ஹைட்ராக்சிகுளோரோகுயின் ஏற்றுமதி விவகாரத்தில் இந்தியாவுக்கு டிரம்ப் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

கொரோனா  வைரஸ் நோய்க்கு தற்போது அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் அல்லது தடுப்பு தடுப்பூசிகள் எதுவும் இல்லை. மலேரியா நோய்க்கு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின், கொரோனாவால்  பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்றாக உள்ளது. உலகின் மிகப்பெரிய மருந்து உற்பத்தியாளர்களில் இந்தியாவும் ஒன்றாகும். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சேவை செய்யும் சுகாதாரப் பணியாளர்களுக்கு சிகிச்சையளிக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த மாதம் பரிந்துரைத்திருந்தது. இந்தியா அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை ஏற்றுமதி  செய்யவில்லை எனில் பதிலடி கொடுப்போம் என மிரட்டினார். இந்த நிலையில் இந்தியாவைச் சார்ந்துள்ள அண்டை நாடுகள் மற்றும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து தனியார் டி.விக்கு அளித்த பேட்டியில், பிரதமர் மோடியுடன் நல்ல புரிதலுடன் பேசியதாகவும், உள்நாட்டு தேவையை முன்னிட்டுதான் தற்காலிகமாக ஹைட்ராக்சஸி குளோரோகுயின் மாத்திரைக்கு இந்தியா தடை விதித்ததை தாம் உணர்ந்து கொண்டதாகவும் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் இருந்து போதிய அளவுக்கு இந்த மருந்து வரும் எனவும் அவர் அப்போது கூறினார்.

திங்கட் கிழமை இரவே மருந்து ஏற்றுமதி கொள்கையில் இந்தியா குறிப்பிடத்தக்க மாற்றம் செய்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின், பாரசிட்டமால் உள்ளிட்ட மருந்துகளின் ஏற்றுமதிக்கு அனுமதி அளித்து விட்டது. இந்த விவரம் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டாலும், அதன் இடையில் டிரம்ப் மிரட்டல் பாணியில் பேசி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து