முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவுடன் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

புதன்கிழமை, 8 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு 12 சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார்.

உலகம் முழுவதும் பரவிய கொடிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் வரும் 14-ம் தேதி வரை 21நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய 9 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் தலைமையில் இந்த பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி குழுவை அமைத்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டார்.

இதற்கிடையே, கொரோனா வைரசின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உத்தரபிரதேசம் உட்பட பல மாநில அரசுகள் மற்றும் வல்லுநர்களின் கோரிக்கையின்படி, நாடு  முழுவதும் 21 நாள் ஊரடங்கை வரும் 14-ம் தேதிக்கு பிறகு நீட்டிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும், அத்தியாவசிய பொருட்கள் போதிய அளவு இருப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்தியஉள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். இதனை தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு 12 சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்கு பின் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளது. இந்த கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், டி.ஜி.பி. திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து