முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

17 வாரியங்களில் பதிவு செய்துள்ள 27 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.1000 வழங்க ரூ. 270 கோடி அனுமதி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

புதன்கிழமை, 8 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

கட்டிட தொழிலாளர்கள், ஓட்டுனர்கள், தையல், சலவை தொழிலாளர்கள், முடிதிருத்துவோர் என 17 வாரியங்களில் பதிவு செய்துள்ள 27 லட்சம் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி 1000 ரூபாய் வழங்க 270 கோடி ரூபாய் அனுமதித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

தமிழக முதல்வரால் 24.3.2020 அன்று தமிழக சட்டமன்றத்தில் விதி 110–ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா ஓட்டுநர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள ஓட்டுநர்கள் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக வேலையிழப்பு ஏற்பட்டதனை ஈடுசெய்ய கட்டுமான வாரியத்தில் பதிவு செய்த 12 லட்சத்து 13 ஆயிரத்து 882 தொழிலாளர்களும், ஓட்டுநர் வாரியத்தில் பதிவு செய்த 83 ஆயிரத்து 500 தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூ.1000 வழங்கவும், மேலும் இவ்வாரியத்தில் பதிவு செய்துள்ள வெளிமாநிலத்திலிருந்து தமிழகத்தில் பணிபுரியும் கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆகியோரின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 14 லட்சத்து 57 ஆயிரத்து 526 குடும்பங்களுக்கு 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

மேலும் தமிழக முதல்வர் வெளிமாநிலத்திலிருந்து தமிழகத்தில் பணிபுரிந்து ஊரடங்கின் காரணமாக தொழிற்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரிந்து வருவாய் இழந்து தவிக்கும் வெளி மாநில தொழிலாளர்களின் நிலை கருதியும், பிற மாநில தொழிலாளர் நலனில் அக்கறை கொண்டும் தமிழக முதல்வரால் 1,34,569 தொழிலாளர்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய் வழங்கிட ஆணையிட்டுள்ளார்.

மேற்கண்டவாறு கட்டுமானம் மற்றும் ஓட்டுனர் நலவாரியத்திற்கு வழங்கிய பணப்பயனைப்போன்று தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரியம், சலவைத் தொழிலாளர்கள் நல வாரியம், முடி திருத்துவோர் நல வாரியம் உள்ளிட்ட 15 அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கும் ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கிட தமிழக முதல்வரால் 6.4.2020 அன்று அறிவிக்கப்பட்டவாறு 14 லட்சத்து 7 ஆயிரத்து 130 தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

தமிழக அரசு 17 வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.1000  வீதம் உதவித்தொகை வழங்கிட ரூ. 270.05 கோடியும், பிற மாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் குடும்பங்களுக்கும், கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் பிறமாநில தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் உணவுப் பொருட்கள் வழங்க ரூ.101.73 கோடியும் செலவிட அனுமதி வழங்கியுள்ளது.

மேற்கண்ட அறிவிப்புகளின்படி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) மூலம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 வீதம் அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. மேற்கண்ட 17 தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்து வங்கிக்கணக்கு விபரங்களை இது நாள் வரை அளிக்காத அமைப்பு சாரா தொழிலாளர்கள், வங்கிக் கணக்கு விவரங்களை உடன் அந்தந்த மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) அலுவலக தொலைபேசி மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகலோ தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அத்தொழிலாளர்களின் வங்கிக் கணக்கு விவரம் கிடைத்த பிறகே மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) அலுவலரால் அவர்களின் கணக்கில் பணம் செலுத்த இயலும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து