முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834-ஆக உயர்வு: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்

வியாழக்கிழமை, 9 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738-லிருந்து 834-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் தமிழகத்திலும் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738-லிருந்து 834-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது;

தமிழகத்தில் 59,918 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். அரசு கண்காணிப்பில் 213 பேர் உள்ளனர். இன்று(நேற்று) கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 96 பேரில் 84 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள். தமிழகத்தில் 6 பேர் உடல்நலம் சரியில்லமால் உள்ளனர். 5 பேரை தவிர மற்ற அனைவரது உடல்நிலையும் சீராக உள்ளது. தமிழகத்தில் போதுமான அளவு முகக்கவசம் இருப்பு உள்ளது. தமிழகத்தில் 34 மாவட்டங்கள் கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.  தமிழகத்தில் கொரோனவால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை. தமிழகத்தில் மொத்தம் 27 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இன்று(நேற்று) ஒரே நாளில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். வீட்டில் இருங்கள், தேவைப்பட்டால் சிகிச்சைக்கு வாருங்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 7,267 பேருக்கு இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நவீன கருவியால் 30 நிமிடத்தில் சோதனை முடிவுகள் தெரிய வரும். ரேபிட் சோதனைக்கான உபகரணங்கள் இன்று(நேற்று) இரவு சென்னை வந்தடையும். கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்து மக்கள் அரசு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.  தமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக நோய் தொற்று அதிகமாகுமா என்பதை இப்போது கூற முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து