முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகம் இதுவரை கண்டிராத மாபெரும் சோதனைக் காலம்: கொரோனா தாக்கம் குறித்து ஐ.நா. வேதனை

வெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ள தாக்கம், அதற்காக செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி ஐ.நா சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தை உண்டாக்கி ஏராளமான உயிர்களை பலிவாங்கி கொண்டிருக்கிறது. வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு முதல்முறை ஆலோசனைக் கூட்டத்தை ஐ.நா நடத்தியுள்ளது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஐ.நா தலைவர் அன்டோனியா குடரெஸ் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் செயல்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதாவது, உலகம் சந்தித்துள்ள இக்கட்டான சூழலில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சீரிய முறையில் செயலாற்ற வேண்டும். ஒவ்வொரு நாடும் கொரோனா தொற்று காரணமாக மிக மோசமான பாதிப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான உயிர்களை பறிகொடுத்து வருகிறோம். ஏராளமான குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்து கொண்டிருக்கின்றனர். மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அத்தியாவசிய சேவைகளுக்காக தொழிலாளர்கள் அதிகப்படியான நேரம் உழைக்க வேண்டி இருக்கிறது. சுகாதாரத்துறையில் முதல் முறையாக எண்ணிப் பார்த்திடாத விளைவுகளை கோவிட்-19 ஏற்படுத்தியுள்ளது.

இதிலிருந்து மீண்டு வர நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. உலக நாடுகள் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் சூழலில் பயங்கரவாத குழுக்கள் தங்களுக்கான வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கின்றனர். போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால் கோவிட்-19 பாதிப்பு மோசமான பாதிப்புகளை அளித்து வருகிறது. சரியான மருந்து கண்டுபிடிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் ஆபத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு கவுன்சிலின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதாவது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்த வேண்டும். ஆனால் தற்போது சமூக அமைதியின்மை மற்றும் பயங்கரவாதம் ஆகியவை அதிகரித்து வரும் சூழல் நிலவுகிறது. இது நோய்க்கு எதிரான நமது போராடும் திறனில் பின்னடைவை ஏற்படுத்துகிறது. ஐ.நா சபை தொடங்கப்பட்டதில் இருந்து முதல்முறையாக உலகம் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறோம். பலரின் வேலைவாய்ப்புகள் பறிபோகியுள்ளன. சர்வதேச அளவில் வியாபாரம் முடங்கியுள்ளது. நமது அன்றாட வாழ்வை புரட்டி போட்டிருக்கிறது. இந்த சூழலில் அனைவரும் ஒற்றுமையுடனும், மன திடத்துடனும் போராட வேண்டும். போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து