முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி தளங்கள் மற்றும் பணிமனை: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

புதன்கிழமை, 24 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 23.2.2021 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, வேலூர், நாமக்கல், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல் மற்றும்  மதுரை ஆகிய மாவட்டங்களில் 5 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 புதிய கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி தளங்கள் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிமனை ஆகியவற்றை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசு, பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகளை இயக்குதல், புதிய பேருந்துகள் மற்றும் வழித்தடங்களை துவக்கி வைத்தல், புதிய பணிமனைகள், பேருந்து நிலையங்கள், அலுவலகங்கள் போன்ற கட்டிடங்களை கட்டுதல், இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு வசதி, பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள், சென்னை மாநகரில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை மாண்புமிகு அம்மாவின் அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில், செங்கல்பட்டு மாவட்டம் - குரோம்பேட்டையில் 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் - உளுந்தூர்பேட்டையில் 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், வேலூர் மாவட்டம் - வேலூரில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிமிடெட் சார்பில் நாமக்கல் மாவட்டம் - ஆதனூரில் 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கோயம்புத்தூர்) லிமிடெட் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம் - பொள்ளாச்சியில் 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருச்சிராப்பள்ளியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், அரியலூர் மாவட்டம் - அரியலூரில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பெரம்பலூர் மாவட்டம் - பெரம்பலூரில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட் சார்பில் திண்டுக்கல் மாவட்டம் - திண்டுக்கல்லில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மதுரை மாவட்டம் - மேலூரில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 10 புதிய கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி தளங்கள் மற்றும் விருதுநகர் மாவட்டம் - விருதுநகரில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிமனை, என மொத்தம் 6 கோடியே 74 லட்சம் ரூபாய் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.  

இப்புதிய கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி தளங்களை செயல்படுத்துவதன் மூலம், அப்பகுதியிலுள்ள அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர்களுக்கும், இதர தனியார் வாகன ஓட்டுநர்களுக்கும் தரமான ஓட்டுநர் பயிற்சி வழங்கவும், விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர்களுக்கு சிறப்பு புத்தாக்க பயிற்சி அளித்து மேற்கொண்டு எவ்வித விபத்தும் ஏற்படாதவாறு அவர்களின் ஓட்டுநர் திறனை மேம்படுத்திடவும் வழிவகை ஏற்படும்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, எம். ஆர். விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், போக்குவரத்துத் துறை செயலாளர் சமயமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து