முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்புக்கு எதிராக பிரசாரம் செய்ய ரூ.417 கோடியை ஒதுக்கீடு செய்த அதிபர் பைடனின் தேர்தல் குழு

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2024      உலகம்
Joe-Biden 2023-08-26

வாஷிங்டன், அதிபர் பைடனின் தேர்தல் குழுவானது 50மில்லியன் டாலரை (ரூ.417கோடி) டிரம்புக்கு எதிரான விளம்பர பிரசாரத்துக்காக ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் நான்கரை மாதங்கள் உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர்   டிரம்ப் போட்டியிடுகிறார். இதே போன்று ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பைடன் மீண்டும் தேர்தலில் களமிறங்கியுள்ளார். இருவருக்கும் வருகிற 27-ம் தேதி நேருக்கு நேர் விவாதம் நடைபெற உள்ளது. 

இந்நிலையில் இந்த விவாதத்துக்கு முன்பாக முன்னாள் அதிபர்  டிரம்ப்புக்கு எதிரான விளம்பர பிரசாரத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கு ஜனநாயக கட்சி திட்டமிட்டுள்ளது.  இதற்காக அதிபர் பைடனின் தேர்தல் குழுவானது 50மில்லியன் டாலரை (ரூ.417கோடி) விளம்பர பிரசாரத்துக்காக ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. 

இதன் மூலமாக டிரம்ப்புக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள், வழக்குகளில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை, பாலியல் வன்கொடுமை மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்டது என அனைத்தும் அமெரிக்காவின் அனைத்து மக்களிடமும் சென்றடையும் வகையில் தொலைக்காட்சிகள், செல்போன்கள், தேசிய கேபிள் மற்றும் ஸ்ட்ரீமிங் சாதனங்கள் மூலமாக விளம்பரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து