முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 22-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2024      தமிழகம்
Rain 2023-08-17

Source: provided

சென்னை : வரும் 22-ம் தேதி கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய கேரள கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் இன்று முதல்  21-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வரும்  22-ம் தேதி கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும்.  ஒரு சில இடங்களில் மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை, 38 டிகிரி செல்ஷியசை ஒட்டியே இருக்கும்.   

தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று  மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்திலும்; இடையிடையே, 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசலாம். இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து