முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2024      ஆன்மிகம்
Tirupati-2023-05-01

திருப்பதி, திருப்பதி கோவிலில் செப்டம்பர் மாதத்திற்கான ஆர்ஜிச சேவை டிக்கெட்டுகளை  தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் மாதந்தோறும் ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள், சேவா டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன. 

வரும் செப்டம்பர் மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை குலுக்கல் முறையில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள தேவஸ்தானம் நேற்று முதல் நாளை 20-ம் தேதி காலை 10 மணி வரை தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடுகிறது.

அதன்படி முன்பதிவு செய்து கொண்டவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களது செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட பக்தர்கள் ஆன்லைன் மூலமாக அதில் குறிப்பிட்டுள்ள கட்டணத்தை தேவஸ்தானத்திற்கு செலுத்தினால் போதும். 

பின்னர் இதற்கான டிக்கெட் பக்தர்களின் செல்போனுக்கு அனுப்பி வைக்கப்படும். வருகிற 21-ம் தேதி காலை 10 மணிக்கு ஆர்ஜித சேவைகளான ஆர்ஜித பிரமோற்சவம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்கர தீப அலங்கார சேவை போன்றவற்றில் பங்கேற்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம்.

செப்டம்பர் மாதம் இலவசமாக அங்கப் பிரதட்சணம் செய்ய விரும்பும் பக்தர்கள் வரும் 22-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். அதே நாளில் காலை 11 மணிக்கு ஸ்ரீ வாணி அறக்கட்டளை மற்றும் தங்கும் அறைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு செய்து கொள்ளலாம். 

மதியம் 3 மணிக்கு ஆன்லைன் மூலம் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு வரும் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. 

அதே நாளில் மதியம் 3 மணிக்கு பக்தர்கள் தங்குவதற்கான அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். http://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பக்தர்கள் அனைத்து சேவைகளையும் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து