முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் நரேந்திர மோடி இன்று பீகார் பயணம்

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2024      இந்தியா
Modi 2023 07 30

Source: provided

புதுடெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று பீகார் மாநிலத்திற்கு செல்கிறார். 

பீகார் மாநிலத்துக்கு இன்று செல்லும் பிரதமர் மோடி, ராஜ்கிர் பகுதியில் நாளந்தா பல்கலைக் கழகத்தின் புதிய வளாகத்தை திறந்து வைக்கிறார்.   இந்தியா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டு ஒத்துழைப்பில் உருவாகி உள்ள இந்த வளாகத்தின் திறப்பு விழாவில் 17 நாடுகளின் தூதர்கள் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

இரண்டு கட்டப்பிரிவுகளுடன் கூடிய இவ்வளாகத்தில் மொத்தம் 1,200 இருக்கை வசதியுடன் 40 வகுப்பறைகளும் தலா 300 இருக்கைகளுடன் இரு கலை அரங்குகளும் உள்ளன. 

550 மாணவர்கள் தங்கும் வசதி கொண்ட விடுதி, சர்வதேச மையம், 2 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையிலான திறந்த வெளி அரங்கம், ஆசிரியர் மன்றம், விளையாட்டு வளாகம் உள்ளிட்டவை அமைந்து உள்ளன.

சூரிய மின்உற்பத்தி அமைப்பு, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் மறுசுழற்சி நிலையம், சுமார் 700 ஏக்கரில் நீர்நிலைகள் உள்பட சுற்றுச்சூழலுக்கு உகந்த வசதிகளுடன் 100 சதவீத பசுமை வளாகமாக அமைக்கப்பட்டு உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து