முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. அரசை கண்டித்து பா.ம.க. பொதுக்கூட்டம் : ராமதாஸ் அறிவிப்பு

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2024      தமிழகம்
Ramadoss 2023-07-28

Source: provided

சென்னை : தி.மு.க. அரசுக்கு எதிராக 3 நகரங்களில் வரும் 17-ம் தேதி முதல்  பொதுக்கூட்டங்களை நடத்த பாட்டாளி மக்கள் கட்சி தீர்மானித்து உள்ளது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில், 

பொய்யான வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தி.மு.க., மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் 450-க்கும் கூடுதலான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

தமிழகத்தில் ஐந்தரை லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்த தி.மு.க. அரசு, ஓய்வுபெற்றவர்களால் ஏற்பட்ட காலியிடங்களைக் கூட நிரப்ப மறுக்கிறது. குத்தகை முறை பணி நியமனங்களின் மூலம் இளைஞர்களை அடிமாட்டு ஊதியத்திற்கு பணியமர்த்துகிறது. 

தனியார் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்த தி.மு.க, பன்னாட்டு நிறுவனங்களுக்கு அஞ்சி, உள்ளூர் மக்களுக்கு வேலை உத்தரவாதத்தை மறுக்கிறது.

தமிழகத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டு, இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், தற்போது வரை அதை நிறைவேற்ற அரசு மறுக்கிறது. 

ஏற்கனவே நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் மூன்றரை ஆண்டுகளாக செயல்படுத்த தி.மு.க. அரசு மறுக்கிறது.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு எட்டாத உயரத்திற்கு சென்று விட்டன.  அதனால் மக்கள் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். அனைத்து நிலையிலும் ஆட்சிக்கு எதிரான அனல் தகிக்கிறது.

தி.மு.க. அரசின் அவலங்களையும், மக்கள்விரோதப் போக்கையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது பொறுப்புள்ள அரசியல் கட்சிகளின் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் தி.மு.க. அரசுக்கு எதிராக பொதுக்கூட்டங்களை நடத்த பாட்டாளி மக்கள் கட்சி தீர்மானித்து உள்ளது. அதன்படி முதல்கட்டமாக  3 பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

வரும் 17-ம் தேதி வியாழக்கிழமை மாலை, சிதம்பரம், விருத்தாசலத்திலும், வரும் 20-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை - திண்டிவனத்திலும்,  வரும்  26-ம் தேதி  சனிக்கிழமை மாலை சேலத்திலும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.  

இந்த பொதுக்கூட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான நானும், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர்  அருள்மொழி உள்ளிட்டோர் உரையாற்றுகிறோம். 

இந்தக் கூட்டங்களில் பா.ம.க. மற்றும் அதன் சார்பு, இணை அமைப்புகளின் அனைத்து நிலை நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து