முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானா சட்டசபை தேர்தல்: 20 தொகுதி காங். வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார்

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2024      இந்தியா
Cong 2024-06-19

Source: provided

சண்டிகர் : அரியானா சட்டசபை தேர்தலில் 20 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர். அனைத்து புகார்களுக்கும் விரிவான பதில் அளிப்பதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது. மொத்தம் உள்ள 90 இடங்களில் அந்த கட்சிக்கு 37 தொகுதிகள் கிடைத்தன. பா.ஜ.க. 48 இடத்தில் வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடித்தது. அரியானா தேர்தல் வாக்குப்பதிவு எந்திரம் பேட்டரியில் உள்ள முரண்பாடுகள் குறித்து காங்கிரஸ் கட்சி ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தது.

இந்த நிலையில் இந்த முரண்பாடுகள் குறித்து காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்துள்ளது. அரியானா தேர்தலில் போட்டியிட்ட 20 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்கள் இந்த புகார் மனுவை அளித்துள்ளனர். சில இ.வி.எம். எந்திரங்களில் 99 சதவீத பேட்டரி சார்ஜ் இருந்தது.

சில வாக்குப்பதிவு எந்திரத்தில் 60 முதல் 70 சதவீத பேட்டரி சார்ஜ் இருந்தது. இது எதிர்பாராத ஒன்று என்று காங்கிரஸ் தனது மனுவில் குற்றம் சாட்டியது. வாக்குப்பதிவு எந்திர பேட்டரியில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக் காட்டியது. இந்த புகார் குறித்து அனைத்துக்கும் விரிவான பதில் அளிப்பதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து