முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேலுக்கு நவீன சாதனத்தை வழங்கியது அமெரிக்கா

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2024      உலகம்
00

Source: provided

வாஷிங்டன்: காசாவுக்கு எதிரான போரில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி இஸ்ரேலை தாக்கி வருகிறது. இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டனர். ஈரான் நாட்டின் தளபதி உள்ளிட்ட முக்கிய நபர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதலை நடத்தியது.

இந்நிலையில், ஈரான் நாட்டின் ராக்கெட் தாக்குதலில் இருந்து கூட்டணி நாடான இஸ்ரேலைப் பாதுகாக்க உதவியாக, அதிக உயரத்தில் ராக்கெட்டுகளை அழிக்கும்திறன் பெற்ற நவீன சாதனம் ஒன்றை அமெரிக்கா வழங்கவுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவின் பேரில், பாதுகாப்பு துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் இதனை வழங்கினார். இதேபோன்று, இஸ்ரேல் வான்பாதுகாப்பை ஊக்குவிக்க உதவியாக அமெரிக்க ராணுவ அதிகாரிகளும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து