முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெகன்மோகன் இன்றுமுதல் ஒரு வாரம் உண்ணாவிரதம்

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      இந்தியா

 

ஐதராபாத்,பிப்.19

ஜெகன்மோகன் இன்றுமுதல் ஒரு வாரம் உண்ணாவிரதம் - ஐதராபாத்தில் இருக்கிறார்.

முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஜெகன்மோகன் இன்றுமுதல் ஒரு வாரத்திற்கு ஐதராபாத்தில் உண்ணாவிரத்தை மேற்கொள்கிறார். மாணவர்கள் கல்வி சம்பந்தமான நிதியுதவி திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கக்கோரி இந்த உண்ணாவிரத்தை அவர் தொடங்குகிறார். 

காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்த ஜெகன் மோகன் மக்கள் ஆதரவை பெறுவதற்காக அடிக்கடி உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார். ஆந்திராவில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரண நிதி ஒதுக்கக்கோரியும் கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டில் ஆந்திராவுக்கு பாதகம் ஏற்பட்டுவிட்டதாகவும் கூறி டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். அதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 25 பேர் உள்பட பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர். 

இந்தநிலையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் டியூசன் பீஸ்சுக்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி இன்று ஐதராபாத்தில் ஜெகன்மோகன் உண்ணாவிரதம் இருக்கிறார். ஐதராபாத்தில் இன்று காலை 10 மணிக்கு உண்ணாவிரதத்தை தொடங்கும் ஜெகன்மோகன் தொடர்ந்து ஒரு வாரகாலத்திற்கு இருப்பார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவருக்கு ஆதரவு கொடுக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டாம் என்றும் ஜெகன்மோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்