முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோனிக்குப் பதிலாக இந்திய அணிக்கு புதிய டெஸ்ட் கேப்டனை நியமிக்கவேண்டும்

செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2012      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி, பிப். - 28 - இந்திய கிரிக்கெட் அணியில் தோனிக் குப் பதிலாக டெஸ்ட் போட்டிக்கு புதி ய கேப்டனை நியமிக்க வேண்டும் என் று முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பே டி தெரிவித்து இருக்கிறார்.  ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணியில் பிளவு உண்டானதற்கு கேப் டன் தோனியை பிஷன் சிங் கடுமை யாக விமர்சித்து இருக்கிறார். மேலும் இந்திய அணியில் 3 துவக்க வீர ர்கள் ஒரே நேரத்தில் விளையாடாததற் கு கேப்டன் தோனியின் சுழற்சி முறை ஓய்வு திட்டமே காரணம் என்றும் இத னால் அணியில் பாதிப்பு ஏற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.  மூத்த வீரர்கள் 3 பேரின் பீல்டிங் திருப்தி அளிக்காததால் அவர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு அளிக்கப்பட்டதாக தோனி கூறியிருந்தார். இது மூத்த வீரர்க ள் மத்தியில் மனக் கசப்பை ஏற்படுத்தி யது. சி.என்.என். - ஐ.பி.என். தொலைக் கா  ட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனா  ன தோனி மேற்கண்டவாறு பதில் அளி த்து இருக்கிறார். தோனியை டெஸ்ட் போட்டியின் கேப் டன் பதவியில் இருந்து நீக்க வேண்டு மா என்று அவரிடம் கேட்ட போது, அவரை நீக்கவிட்டு வேறு கேப்டனை நியமிக்க இதுவே நல்ல தருணம் என்றார் அவர். மேலும், இது தேர்வுக் குழுவினரின் வேலை. நான் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை. தோனியி ன் கேப்டன்ஷிப் சமீபத்தில் அதிருப்தி யை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் புதிய டெஸ்ட் கேப்டனை நியமிக்க இது நல் ல தருணம் என்றும் பேடி தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணியில் ஏற்பட்ட பிளவால் தோனி யின் கேப்டன்ஷிப் பாதிக்கப்பட்டது. இதை தோனியே உருவாக்கினார். இது தொடர்பாக அவர் தான் முதன் முதலி ல் நிருபர்களிடம் பேசினார் என்றும் பிஷன் கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் தோ  னியின் கேப்டன்ஷிப் குறித்து கேட்ட போது, இந்த பயணத்தில் தோனி தடு மாறி வருகிறார். அணியில் உள்ள வீரர் களை ஒருங்கிணைத்து சென்றால் தான் கேப்டன் வெற்றி பெற முடியும். வீரர்க ள் மத்தியில் பிளவை ஏற்படுத்தக் கூடாது. இதுவே நல்ல கேப்டனுக்கு அடையாளம். ஆனால் இந்த பயணத்தி ல் தோனி கேப்டன்ஷிப்பை சரியாக ஆற்றவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் மூத்த வீரர்கள் குறித்து அவர்க ள் மெதுவாக பீல்டிங் செய்கிறார்கள் என்று தோனி குறிப்பிட்டு இருக்கக் கூடாது. இதே தவறை பின்பு சேவாக்கு ம் செய்து இருக்கிறார். இரண்டு தவறு கள் சரியாகி விட முடியாது. இதனால் இளம் வீரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் பேடி தெரிவித்தார்.
தவிர, தோனி டெஸ்ட் போட்டியில் சரியாக பேட்டிங்கும் செய்யவில்லை. சரியாக கீப்பிங்கும் செய்யவில்லை. அவர் இது இரண்டிலும் கவனம் செலுத் தி முன்னேற வேண்டியுள்ளது என்றும் பிஷன் கூறியிருக்கிறார்.
----------------------------------------------
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்