முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்தி வெங்கடாசலபதி கடவுள் டெல்லி கொண்டு வரப்படுகிறார்

செவ்வாய்க்கிழமை, 22 மார்ச் 2011      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி,மார்ச்.22 - பக்தர்கள் தரிசனம் பெறுவதற்காகவும் சிறப்பு பூஜைக்காகவும் திருப்பதி வெங்கடாசலபதி கடவுள் (உற்சவர்) டெல்லி கொண்டு வரப்படுகிறார். அப்போது சிறப்பு பூஜையும் நடைபெறும். தலைநகர் டெல்லியில் வருகின்ற ஞாயிற்றுக்கிழைமை கல்யாண மகோற்சவம் பூஜை நடத்தப்படுகிறது. அதற்காக திருப்பதி கடவுள் உற்சவ மூர்த்திகளான கடவுள் ஸ்ரீ வெங்கடேஸ்வரர்,லட்சுமி மற்றும் பத்மாவதி தாயார் ஆகியோர்களின் உற்சவ சிலைகள் டெல்லிக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த சிலைகள் ஐம்பொன்னால் செய்யப்பட்டவைகளாகும். இந்த சிலைகள் வைர கற்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். கல்யாண மகோற்சவம் பூஜையின்போது திருப்பதி வெங்கடாசலபதிக்கும் லட்சுமி-பத்மாவதி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். இந்த உற்சவ மூர்த்திகளுடன் பாதுகாப்பாக 40 பூஜாரிகளும் உடன் வருகிறார்கள். வழக்கமாக தரிசனம் பெறுவதற்காக திருப்பதிக்கு பக்தர்கள் செல்வார்கள். இந்த தடவை பக்தர்களை தேடி கடவுள் வெங்கடாசலபதியும் லட்சுமி மற்றும் பத்மாவதி தாயாரும் செல்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்