முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி - 20 இங்கிலாந்து பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது

புதன்கிழமை, 29 பெப்ரவரி 2012      விளையாட்டு
Image Unavailable

அபுதாபி, மார்ச். - 29 - பாகிஸ்தான் அணிக்கு எதிராக அபுதா பியில் நடைபெற்ற 3 -வது 20 -க்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி பரபர ப்பான ஆட்டத்தில் 5 ரன் வித்தியாசத்தி  ல் வெற்றி பெற்று தொடரை 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படை த்தது.  இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி தரப்பில், கெவின் பீட்டர்சன் சிற ப்பாக பேட்டிங் செய்து அரை சதம் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அவருக்குப் பக்கபலமாக கீஸ் வெட்டர் மற்றும் படேல் இருவரும் ஆடினர்.  பின்பு பெளலிங்கின் போது, டென்பே ச் அபாரமாக பந்து வீசி 2 விக்கெட் எடு த்தார். அவருக்கு ஆதரவாக பிராட் மற் றும் ஸ்வான் ஆகியோர் பந்து வீசினர். கேப்டன் கிறிஸ் பிராட் தலைமையி லான இங்கிலாந்து அணிக்கும் கேப்ட ன் மிஸ்பா தலைமையிலான பாகிஸ் தான் அணிக்கும் இடையே 3 போட்டி கள் கொண்ட டி - 20 போட்டி நடைபெ ற்றது. இதன் 3 -வது மற்றும் கடைசி போட்டி பொதுமைதானமான அபுதாபியில் உள்ள ஷேக் ஜாயெத் அரங்கத்தில் பக லிரவு ஆட்டமாக நடந்தது.  இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந் த அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்னை எடுத்தது.  துவக்க வீரராக இறங்கிய கெவின் பீட்டர்சன் அதிரடியாக ஆடி, 52 பந்தில் 62 ரன்னை எடுத்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, கீஸ் வெட்டர் 17 ரன்னையும், படேல் 16 ரன் னையும் எடுத்தனர்.  பாகிஸ்தான் அணி சார்பில், சுழற் பந்து வீச்சாளரான சயீத் அஜ்மல் 23 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். தவிர, சீமா 1 விக்கெட் எடுத்தார். பாகிஸ்தான் அணி 130 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை இங்கிலாந்து அணி வைத்தது. ஆனால் அடுத்து பேட்டிங் செய்த அந்த அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற் கு 124 ரன்னை மட்டும் எடுத்தது. இதனால் இந்த 3 - வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 ரன் வித்தியாசத் தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2 - 1 என்ற கணக்கில் கைப்ப ற்றி சாதனை படைத்துள்ளது.
பாகிஸ்தான் அணி தரப்பில், ஆசாத் சபீ க் 32 பந்தில் 34 ரன்னையும், மிஸ்பா 32 பந்தில் 28 ரன்னையும், ஜியா 28 பந்தில் 23 ரன்னையும், உமர் அக்மல் 23 பந்தில் 22 ரன்னையும் எடுத்தனர்.
இங்கிலாந்து அணி சார்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான டென்பேச் 24 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடு த்தார். தவிர, பிராட் மற்றும் ஸ்வான் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகனாக பீட்டர்சன் தேர்வு செய்யப்பட்டார்.
--------------------------------------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்