முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய அணி அறிவிப்பு சேவாக், ஜாஹிருக்கு ஓய்வு

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

மும்பை, மார்ச். - 2 - வங்கதேசத்தில் அடுத்த மாதம் நடக்க இருக்கும் ஆசிய கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்காக 15 பேர் கொ  ண்ட இந்திய வீரர்களின் பட்டியலை தேர்வுக் குழுவினர் நேற்று அறிவித்தனர். இதில் துணைக் கேப்டன் சேவாக் வேகப்பந்து வீச்சாளர்களான ஜாஹிர்கான் மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய மூவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. ஆசிய கோப்பைக்கான ஒரு நாள் கிரிக் கெட் போட்டி அடுத்த மாதம் வங்கதே சத்தில் துவங்க இருக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய 4 நாடுகள் கோப் பைக்காக களம் இறங்க உள்ளன. கடந்த வருடம் நடைபெற்ற 50 ஓவருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, ஆசிய கோப்பை போட்டியிலும் நடப்பு சாம்பியனாக உள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ந டத்தப்படுகிறது. இதற்காக நான்கு நாடுகளும் ஆயத்தமாகி வருகின்றன. இந்தப் போட்டி இம்மாதம் 11 -ம் தேதி முதல் 22 -ம் தேதி வரை நடக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரு ம் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் அதிர டி வீரரான சேவாக் 5 ஆட்டத்தில் பங்கு கொண்டு 65 ரன்னை மட்டும் எடுத்து இருக்கிறார். எனவே அடுத்த போட்டியில் அவர் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்று பத்திரிகையில் செய்தி வெளியானது. அதே போல சேவாக் அணியில் இருந்து நீக்கப்பட்டு  இருக்கிறார். ஆனால் உடற்தகுதி காரணமாக சேவாக் மற்றும் முன்னணி வீரர்கள் சிலர்  நீக்கப்பட்டு உள்ளதாக தேர்வுக் குழுத் தலைவரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந் த் தெரிவித்து இருக்கிறார்.  ஆசிய கோப்பை போட்டிக்கான வீரர் கள் தேர்வின் போது, நாங்கள் தீவிர மாக விவாதித்து பின்னர் தான் வீரர்க ளை முடிவு செய்து இருக்கிறோம். ஆஸ்திரேலிய பயணத்தில் வீரர்கள் ஆடியது குறித்தும் நாங்கள் விவாதித் தோம் என்று தேர்வுக் குழுக் கூட்டம் முடிந்த பிறகு, நிருபர்களைச் சந்தித்த ஸ்ரீகாந்த் கூறினார்.
மேலும், வீரேந்தர் சேவாக் மற்றும் ஜா ஹிர்கான் இருவரையும் ஓய்வு எடுக்கும் படி பிசியோ தெரபிஸ்ட் கேட்டுக் கொண்டு இருக்கிறார். அவர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் தான் நாங்கள் இந்த முடிவை எடுத்தோம்.
தவிர, சேவாக் மற்றும் ஜாஹிர்கான் இருவரும் தற்போது காயம் அடைந்து இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் தான் அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்ப ட்டு உள்ளது. இதற்கு வேறு காரணம் எதுவும் கிடையாது என்றும் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
தோனி தலைமையிலான இந்திய அணியில் அதிரடி வீரரான யூசுப் பதான் மற் றும் வேகப் பந்து வீச்சாளர் அசோக் திண்டா இருவருக்கும் மீண்டும் வாய்ப் பு அளிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2010 -ம் ஆண்டு ஆசிய கோப் பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்தது.  இதில் வேகப் பந்து வீச்சாளர் திண்டா கலந்து கொண்டார். அவர் தற் போது உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடியதன் அடிப்படையில் அவருக்கு அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரு ம் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் சிறப் பாக ஆடி இந்திய அணியின் மானம் காத்த விராட் கோக்லி ஆசிய கோப் பை போட்டிக்கு துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்திய அணி - டெண்டுல்கர், காம்பீர், விராட்கோக்லி, சுரேஷ் ரெய்னா, ரோ கித் சர்மா, மனோஜ் திவாரி, யூசுப் பதான்,  ரவீந்திர ஜடேஜா, தோனி (கே ப்டன்), இர்பான் பதான், பிரவீன் குமார், வினய் குமார், அசோக் திண்டா, அஸ்வின் மற்றும் ராகுல் சர்மா ஆகியோர்.
-------------------   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்