முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் அமெரிக்க அதிரடிப்படைகள் குவிப்பு

சனிக்கிழமை, 3 மார்ச் 2012      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன். மார்ச்.- 3 - இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள்  சிலவற்றில் அமெரிக்க அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தீவிரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒரு  பகுதியாக இவர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடற்படை தளபதி ஒருவர் கூறியுள்ளார். அமெரிக்க கடற்படையின் ஆசிய பசிபிக் பிராந்திய தளபதி ராபர்ட் வில்லார்ட் வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது அவர் கூறுகையில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கையை மேலும் பலப்படுத்துவதன் ஒரு பகுதியாக இந்தியா உள்ளிட்ட  தெற்காசிய நாடுகளில் அமெரிக்க கடற்படையின் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்றார். இந்தியா தவிர நேபாளம், வங்காளதேசம், இலங்கை, மாலத்தீவு ஆகிய தெற்காசிய நாடுகளில் இந்த படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவுடன் அமெரிக்கா நெருக்கமாக  இருப்பதாகவும்  குறிப்பாக கடல் பகுதியில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியாவுக்கு உதவிகரமாக இருப்பதாகவும் அவர் கூறினார். ராணுவத்துடன்  ராணுவம்  தொடர்பு இல்லை என்றாலும் கூட இந்த விஷயத்தில் இரு நாடுகளின் மற்ற புலனாய்வு ஏஜன்சிகள் தொடர்புகளை வைத்திருகக்கும் என்றும் அவர் கூறினார். பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டுள்ள லஸ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத  இயக்கம் மிகவும் அபாயகரமான அமைப்பு என்றும்  இந்த  தீவிரவாத இயக்கம்  பாகிஸ்தானில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும்  தீவிரமாக இயங்கி வருகிறது என்றும் அவர் கூறினார். இந்த இயக்கம் இந்த பிராந்தியத்தில் மாபெரும் அச்சுறுத்தலாக இருப்பதால்  அதை முறியடிக்க  தெற்காசிய நாடுகளின் ஒத்துழைப்பை பெறுவதற்காகவும்  அந்த நாடுகளுக்கு தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் உதவி செய்வதற்காகவும் அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். முன்னதாக அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் வில்லார்ட் பேசினார். அப்போது  தீவிரவாத தடுப்பு பங்கு பணியில் இந்தியாவுடன் அமெரிக்கா எப்படி ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது என்ற கேள்விக்கு வில்லார்ட் பதில் அளித்து பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago