முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு ஹிலாரி கிளிண்டன் பாராட்டு

சனிக்கிழமை, 3 மார்ச் 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், மார்ச். - 3 - ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை குறைத்துக் கொள்ளுங்கள். கச்சா பெட்ரோலிய எண்ணெய்க்கு அந்த நாட்டை பெரிதும் நம்பியிருக்காதீர்கள் என்று நாம் கூறியதன்படி இந்தியா நடக்க தொடங்கியிருக்கிறது என்று அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறியிருக்கிறார். இந்தியா, சீனா, துருக்கி ஆகிய நாடுகள்தான் ஈரானிடம் எண்ணெய் வாங்கும் பெரிய நாடுகள். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் 22 சதவீதம் சீனாவுக்கும், 12 சதவீதம் இந்தியாவுக்கும்தான் என்பதால் இவ்விரு நாடுகள் வாங்குவதை அறவே நிறுத்தினாலோ, அல்லது குறைத்துக் கொண்டாலோ ஈரான் நிலைகுலையும் என்று அமெரிக்கா கருதுவதை போல தெரிகிறது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட நாடாளுமன்ற குழு கூட்டத்தில் ஹிலாரி இதை தெரிவித்திருக்கிறார்.   சீனா நம்முடைய வேண்டுகோளை முழுதாக ஏற்கவில்லை என்றாலும் அதவும் ஓரளவுக்கு குறைத்து கொள்ள முன்வந்திருக்கிறது என்பதை அக்கூட்டத்தில் அவர் தெரிவித்தார். ஈரான் மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்காவும், பிற நாடுகளும் சமயம் பார்த்து கொண்டிருப்பதால் வளைகுடா பகுதியில் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும். கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இந்த அச்சத்தை சுட்டிக் காட்டியே தனது காரியத்தை முடித்து கொள்ள பார்க்கிறது அமெரிக்கா.  ஈரானுடன் இந்தியா என்ன பேசியது. இந்தியா என்ன வாக்குறுதியை அமெரிக்காவுக்கு தந்திருக்கிறது. தன்னுடைய எண்ணெய் தேவைகளுக்கு இந்தியா என்ன செய்யும் என்பதற்கெல்லாம் விடை தெரியவில்லை. ஈரானிடம் இருந்து பாகிஸ்தான் வழியாக குழாய் மூலம் இயற்கை நிலவாயுவை பெட்ரோலிய கச்சா எண்ணெயையும் கொண்டு வரும் திட்டம் என்ன ஆயிற்று என்றும் தெரியவில்லை. ஈராக், ஆப்கானிஸ்தானுக்கு பிறகு ஈரான் மீது படையெடுக்க அமெரிக்கா தருணம் பார்த்து கொண்டிருக்கிறது. எனவே ஈரானை பொருளாதார ரீதியாக சிக்கலில் ஆழ்த்தவே அதன் எண்ணெயை விலைக்கு வாங்கும் நாடுகளை அமெரிக்கா மறைமுகமாக நிர்பந்தித்து வருகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்